நரகத்தின் வழியாக சொர்க்கம் !
இப்போதெல்லாம் நாளேடுகளை புரட்டினால் தற்கொலை செய்திகள் தான் அதிகம் இடம்பிடித்து வருகின்றன . தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடம் .
பெருகிவரும் தற்கொலைக்கு காரணம் என்ன? ஆராய்ந்து பார்தோமேயானால், மலையளவு இல்லை !
கணவனுக்கு வேலையில்லை பொறியியல் படித்த மனைவி தற்கொலை !
காதலுக்கு வீட்டில் எதிப்பு காதலர்கள் தற்கொலை !
செய்து வந்த தொழிலில் நஷ்டம், தொழில் அதிபர் குடும்பத்தோடு தற்கொலை ! தீபாவளிக்கு துணி எடுக்கவில்லை தற்கொலை தான் முடிவு !
சின்ன சின்ன விசியங்களுக்கெல்லாம் தற்கொலை தான் தீர்வா ?
இன்று நல்ல விசியங்கள் அருகி வருகின்றன .அல்லாத விசியங்கள் பெருகி வருகின்றன.நல்லவைகளை கற்றுக்கொள்ள மறுக்கிறோம் ! அல்லவைகளை தெரிந்துகொள்ள விழைகிறோம் !.
பிரட்சனைகள் எதுவானாலும் எதிர்கொள்ள பழகுவோம்!
போராட்டம் தான் ஒருவனக்கு பெரும் படிப்பினை !.
நமது வாழ்க்கையில் நாம் பெறும் பெரிய நன்மை இந்தப் போரட்டப்பயிற்சியே போராட்டத்தின் வழியாகவே நாம் செல்ல வேண்டும் . சொர்கத்திற்கு ஒரு பாதை இருக்குமானால் அது நரகத்தின் வழியாகவே இருக்கும்.நரகத்தின் வழியாக சொர்கத்திற்கு செல்வது தான் என்றும் உள்ள வழி !. ஒரு முறை அல்ல : பல்லாயிரம் முறை சூழ்நிலையுடன் போராடி , இறந்து , அப்போதும் , தைரியத்தை இழக்காமல் ஆன்மா போராடுமானால் அது பேராற்றல் உள்ளதாக மாறிவிடும். வாழ்க்கைப் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் .
"குந்தியின் மகனே !
கொல்லப்பட்டால் சொர்கத்தை அடைவாய் !, வெற்றி பெற்றால் நாட்டை அனுபவிப்பாய் ! அதனால்,போரிடுவதற்கான உறுதியுடன் எழுந்திரு !" -என்று கண்ணன் கீதையில் அர்ஜுனன்னுக்கு கூறினார் .
வாழ்க்கை எதுவானாலும் தோல்வி மனப்பான்மையை விட்டுவிட வேண்டும்.
தோல்வி மனப்பான்மையும், தளர்ச்சியும், வாழ்கையின் மலர்ச்சியை மறுப்பதாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
tnc.repa@gmail.com