கலாம் ஒரு சரித்திரம் !
" செயல் "-அதுவே சிறந்த சொல் ! என்பார் சேகுவேரா.
சிலர் நன்றாக எழுதுவார்கள் . சிலர் உணர்ச்சி கொப்பளிக்க பேசுவார்கள் . செயல் என்பதோ சிறிதும் இருக்காது.
அப்துல் கலாம் அவர்களிடம் அவரது எழுத்தும் பேச்சும் போன்றே, செயலும் அமைந்திருக்கும் .
ஜனாதிபதி பதவிக்கு உரிய அதிகாரத்தை உரிய முறையில் செவ்வனே செய்து காட்டிய முதல் குடிமகன் !
ஜனாதிபதி மாளிகையில் தனது உறவினர்களை குடியமர்த்தாமல், தனது புத்தகங்களால் அலங்கரித்து ஜனாதிபதி மாளிகை மரபுக்கு மகுடம் சூட்டிய மாமேதை !
ஜனாதிபதி மாளிகையில் தன்னை பார்க்க வந்த சகோதரருக்கு, தன் சொந்த கையிருப்பில் இருந்து போக்குவரத்து உட்பட அனைத்து செலவினங் களையும் செய்தவர்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டவருக்கு விட்டுக்குடுத்த மாமனிதர்!
கனவு காண்! நாட்டை முன்னேற்று ! அக்கினி சிறகை விரி ! தன்னம்பிக்கை கொள் ! என்று நல் விதைகள் தூவி இளைய தலைமுறையை செழிக்கச் செய்த சீமான்!
இந்தியா மட்டுமல்லாமல், தாண்டி: பாரே பின்பற்றும் முன்மாதிரி!
தனது பதவிக்காலம் முடிந்து தனக்கு வந்த பரிசுப்ப்பொருளை தனது சொந்த கிராமத்துக்கு ரயில் ஏற்றிவிடாத முதல் குடிமகன்!
அவர் சொன்னார் : நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் , இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்.
இதோ ....அவர் சரித்திரம் ஆனார்!
--வைகறை கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
tnc.repa@gmail.com