நீதியற்ற ஊக்கம் கொடுங்கோலானது !
சில தினங்களுக்கு முன்பு சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சார்ந்த நண்பர்கள் மூன்று பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சினிமா பார்பதற்காக சென்றிறுந்தனர்.
அப்போது, கே.கே.நகர் 80அடி சாலை அருகே அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலிசார் , மூன்று பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்வதை தடுக்கும் பொருட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக சைகை காட்ட , மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நண்பர் வாகனத்தை நிறுத்தாமலே வேகமாக ஓட்ட முயற்சித்துள்ளார்.
போக்குவரத்து போலிசார் அவர்களை பிடிக்க முயற்சிக்க , அவர்களோ தப்பிக்க முயற்சிக்க திடீர்ரென்று எதிர்பாராத அந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது.
சாலை தடுப்புச் சுவரில் இருந்த கம்பியில் மோதியதில் குடல் சரிந்து பரிதாபமாக ஒருவர் உயிர் இழந்தார்.
இது தெரிந்து பொதுமக்கள் உடனே சாலை மறியலில் ஈடுபட்டு , ஆவேசத்தில் சாலை தடுப்புச் சுவரின் கம்பிகளை ஆவேசத்துடன் உடைத்தனர்.
பொதுமக்களின் போராட்டத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலிசார் இடம்மாற்றம் செயப்பட்டனர்.
இது போன்று அவ்வப்போது சாலை மறியலும் காவலர்கள் இடமாற்றமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது
இச் சம்பவம் நமக்கு உணர்த்துவது என்ன ? இனியும் நடக்காமல் தடுக்க என்ன செய்யலாம் ? பொது மக்கள் எவ்வாறு உதவலாம் ?
இதே போன்று சென்ற மாதம் வியாசர்பாடியில் ஒரே வாகனத்தில் மூன்று மாணவர்கள் அதுவும் இளையவர்கள் (மைனர் ) ஓட்டிச்செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டது.
அப்போதாவது பெற்றோர், பொதுமக்கள் ,காவல்துறை விழித்திருக்க வேண்டும் !
ஒரே வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது போக்குவரத்து சட்டம் பிரிவு 128 க்கு எதிரானது .
இரண்டு சக்கர மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் தன்னுடன் கூட ஒரு நபரைத் தவிர மேற்கொண்டு நபர்கள் எவரையும் ஏற்றிச்செல்லுதல் கூடாது.
சாலை போக்குவரத்து ஒழுங்கை பராமரிக்கும் காவல் அலுவலரின் அனைத்து கட்டளைகளுக்கு ஏற்பவும் வாகன ஓட்டுனர் செயற்படுதல் வேண்டும் என்று பிரிவு 119 அறிவுறுத்துகிறது.
மேற்கண்ட விபத்தில் பிரிவு 128, பிரிவு 119 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிகழ்ந்திருக்கிறது.
ஆனால், பொதுமக்கள் பணி செய்துகொண்டிருந்த காவலரை துரத்தி துரத்தி அடித்துள்ளனர்.
மேலும், சாலை பாதுகாப்பு கருதி சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்தெறிந்துள்ளனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்க காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மரணத்தையும் பாதிப்பையும் நான் உணராமல் சொல்லவில்லை!
உணர்வதினால் தான் சொல்கிறேன்.
தன் அன்பு மகன்களை நல்ல பண்புகள் பின்பற்றி வளர உதவுங்கள் !
பொது மக்கள் என்ன நடந்தது? எப்படிநடந்தது? குற்றம் யார் மீது ? என்று
தெரிந்து செயல்படுங்கள் !
ஒரு பேருந்தில் நடக்கும் ஜேப்படி திருடனுக்கு எதிராக செயல்பட துணிந்ததுண்டா? பொது இடத்தில் நடக்கும் வன்முறையை தடுக்க, அத்துமீறலை தடுக்க காவல் துறைக்கு தகவல் கொடுத்து உதவ துணிந்ததுண்டா?
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏஜென்சிகளும் , பராமரிக்கும் காவல் துறையும் தங்கள் கடமையை சரியாக செய்து வந்தால், இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்திருக்கலாம்.
இன்று இரண்டு சக்கர வாகனங்களில் குடும்பம் குடும்பம்மாகதானே பயணிக்கிறார்கள் !
மூன்று இளைஞர்களுடன் பறக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் தானே சாலைகளில் அதிகம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லபோனால் 10 வயது சிறுவன் சிறுமி கூடபோக்குவரத்து காவலர் பார்த்தால் தண்டனை உண்டே என்கிற பயமே இல்லாமல் சாதாரணமாக சாலைகளில் வாகனங்கள் ஓட்டிச்செல்வதை பார்க்க முடிகிறது என்றால்...!
ஊக்கமற்ற நீதி உயிரற்றது.
நீதியற்ற ஊக்கம் கொடுங்கோலானது !-பிளாய் பாஸ்கல் கூறிய நீதி மொழி எவ்வளவு உண்மையானது!
புகைப்படம் : தினத்தந்தி நாளிதழ்
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
tnc.repa@gmail.com