எனது நண்பரொருவர் இன்று என்னை சந்திக்க வந்திருந்தார் .அப்போது அவர் மிகவும் வாட்டமுடன் காணப்பட்டார்.அவர் சுற்றுலா வாகன ஓட்டுநர்.சென்னையிலிருந்து திருப்திக்கு தினமும் பகதர்களை அலைதுச் செல்பவர்.தனது காரில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு காலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு திருப்தி தரிசனம் முடிந்து இரவு எட்டு மணியளவில் சென்னை வந்தடைவார்.அப்படி நேற்று தனது காரில் ஒரு வழக்கறிஞரை திருப்தி தரிசனம் காண அழைத்துச் சென்றிருக்கிறார்.சிறப்புத் தரிசனம் அது .அதற்க்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். நமக்கு வேண்டிய நேரத்தில் தரிசனம் டிக்கெட் கிடைப்பது அரிது.எந்த நேரம் தரிசனம் டிக்கெட் கிடைக்கிறதோ அதில் நாம் தரிசனம் செய்வது வாடிக்கை.இதில் வழக்கறிஞரின் விருப்ப நேரத்தில் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக, வழக்கறிஞர் வேண்டுமென்றே திருப்பதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.வேண்டுமென்றே மிக மிக காலதாமதம் செய்து மறுநாள் அதிகாலை சென்னை வந்து சேரும்படி செய்துள்ளார்.வாகனத்தில் வரும்போது கார் ஓட்டுனரை எழுதமுடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.நான் யார் தெரியுமா? உன்னை கோர்ட்டுக்கு இழுக்காம விடமாட்டேன் என்று பயமுறுத்தியிருக்கிறார்.
நாம் கோவிலுக்கு செல்வதே அமைதியை தேடித்தான் செல்கிறோம் .நமை நாமளே சுய பரிசோதனை செய்து கொள்ளத்தான்.கோவிலுக்கு சென்றுவிட்டு அநீதியையும் செய்வதை என்னென்று சொல்லுவது?.
ஆபிரகாம் லிங்கன் தனக்கு கார் ஓட்டிவந்த ஓட்டுனர் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது அவரது இரு கால்களையும் பிடித்து அமுக்கி விட்டாறாம்!.
சாதி,சமயம் ,நாடு ,மொழி,ஆகிய எல்லைகளை கடந்து மனித நேயமாகிய அன்பின் அடிப்படையில் அமைவது அக வாழ்வு!.ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் பற்றே அடிப்படையாக அமையும்.அந்தப் பற்று அன்பால் மலர்ந்து அருளாய் மனம் பரப்ப அனைத்து உயிர்களும் நலம் பெற உதவும்.தாம் இனிது வாழ்ந்து,தம்மை சார்ந்தாரையும் இனிது வாழவைக்கும் தூய அக வாழ்வே வாழ்வு!
பிறரைப் பாராட்டுங்கள்! பாராட்டு கிடைக்கும்.பிறரை மதியுங்கள்! மதிப்பு கிடைக்கும் .அன்பு செலுத்துங்கள்! அன்பு தேடி வரும்.இவைகள் ஒற்றையடிப்பபாதைகள் அல்ல , இரட்டை வழிப் பாதைகள் என்கிறார் முகமது நபி அவர்கள் .
தயவுகூர்ந்து பிறரை மதியுங்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
tnc.repa@gmail.com